அண்மையில் பஹாமஸ் தீவுகளை (Bahamas) தாக்கிய Dorian என்ற சூறாவளிக்கு இதுவரை 50 பேர் மட்டுமே பலியானதாக பட்டியலிடப்பட்டாலும், தற்போது சுமார் 2,500 பேர் காணப்படாதோர் பட்டியலில் உள்ளனர். சிறிய ஒரு தீவில் இவர்கள் தவறி தற்போது ஒரு கிழமைக்கு மேலாகிறது.
.
செப்டம்பர் 1ஆம் திகதி Abacos தீவின் கிழக்கே நுழைந்த Dorian செப்டம்பர் 3ஆம் திகதி தீவின் வடக்கே வெளியேறி இருந்தது.
.
இந்த சூறாவளி Abacos தீவை தாக்கியபோது காற்று வீச்சு 295 km/h (185 mph) ஆகவும், மழை வீழ்ச்சி 89 cm (35 inch) ஆகவும் இருந்துள்ளது.
.
இந்த சூறாவளி பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும், சூறாவளி கடலோரம் வடக்கே திரும்பி சென்று உக்கிரத்தை இழந்தது.
.