கப்பலோட்டிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட அமெரிக்கா

USFlag

Adrian Darya என்ற பெயர்கொண்ட (முன்னர் Grace 1) ஈரானிய எண்ணெய் கப்பலின் தலைமை கப்பலோட்டிக்கு (captain) பல மில்லியன் அமெரிக்க டாலர்களை இலஞ்சமாக வழங்க அமெரிக்கா முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 43 வயதுடைய அகிலேஷ் குமார் (Akhilesh Kumar) என்ற அந்த இந்திய பிரசையான கப்பலோட்டி இலஞ்சத்தை பெற்று அமெரிக்காவுக்கு உதவ மறுத்துள்ளார்.
.
இந்த கப்பல் ஈரானின் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சிரியா நோக்கி சென்றது. அதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா அந்த கப்பலை கைப்பற்றும்படி Gibraltar அதிகாரிகளை கேட்டுள்ளது. Gibraltar அந்த கப்பலை சில தினங்கள் தடுத்து வைத்திருந்தாலும், பின்னர் போதிய சட்ட ஆதாரங்ககள் இன்மையால் விடுத்துள்ளது.
.
விடுவிக்கப்பட்ட அந்த கப்பல் சிரியா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. அப்போதே வேறு வழி எதுவும் கிடைக்காத அமெரிக்கா அந்த கப்பலின் மாலுமிக்கு இலஞ்சம் வழங்கி, கப்பலை தனது உரிமை கொண்ட கால்பரப்பு ஒன்றுக்கு அழைத்து, கைப்பற்ற முனைந்துள்ளது.
.
அமெரிக்க அதிகாரியான Brian Hook மாலுமிக்கு எழுதிய ஈமெயிலில் “This is Brian Hook… I work for secretary of state Mike Pompeo and serve as the US Representative for Iran… I am writing with good news…” என்று எழுதப்பட்டு இருந்ததாம். அத்துடன் அந்த ஈமெயிலில் மாலுமிக்கு பல மில்லியன் வழங்கும் செய்தியும் கூறப்பட்டிருந்தது.
.
மேலும் அந்த ஈமெயில் “With this money you can have any life you wish and be well-off in old age” என்றும் கூறி, “If you choose not to take this easy path, life will be much harder for you” என்று மிரட்டலும் விடப்பட்டு இருந்ததாம்.
.
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அமெரிக்கா இந்த கப்பல் மீதும், அதன் மாலுமி அகிலேஷ் குமார் மீதும் தடை விதித்து இருந்தது.
.
சில தினங்களுக்கு முன் இந்த கப்பல் சிரியாவின் கரையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2.1 மில்லியன் பரல் எண்ணெய் உள்ளது.
.