பிரித்தானிய பிரதமரின் தம்பி பதவி விலகினார்

UK_EU

தற்போதைய பிரித்தானிய பிரதமர் Boris Johnsonனின் தம்பியார் Jo Johnson இன்று தனது வர்த்தக அமைச்சர் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்துள்ளார். பிரதமரும், அண்ணனுமான Boris உடன் கொண்ட Brexit தொடர்பான முரண்பாடே தம்பியின் பதவி துறப்புக்கு காரணம்.
.
Brexit தொடர்பாக இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் தனது விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்காத தம்பி உட்பட 21 Tory (அல்லது Conservative) கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விளக்கினார் பிரதமர் ஜான்சன். அதனால் உட்கட்சி முரண்பாடு, குடும்ப முரண்பாடாக மாறியுள்ளது.
.
Jo தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலும், இடைத்தேர்தல் ஒன்று இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக அவர் அடுத்த தேர்தல்வரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொண்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
.