இலங்கையின் வடமேற்கு பகுதியான மன்னாரை அண்டிய கடலில் எண்ணெய் அகழ்வு பணிகளில் இலங்கை ஈடுபடவுள்ளது. இந்த பணிகளை செய்யும் உரிமையை இலங்கை அரசு பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனத்துக்கும், நோர்வேயின் Equinor நிறுவனத்துக்கும் வழங்கி உள்ளது.
.
2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வு செயல்பாட்டுக்கு வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
.
தற்போது எண்ணெய் உற்பத்தி அற்ற நாடான இலங்கை 2018 ஆம் ஆண்டில் $4.15 பில்லியன் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
.
மன்னார் பகுதியில் உள்ள 30,000 சதுர km கடலில் சுமார் 1 பில்லியன் பரல் எண்ணெய் உள்ளதாக இலங்கை கூறுகிறது.
.
இலங்கையின் கிழக்கேயும் எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பமாவுள்ளன.
.
Equinor தான் செய்யும் திட்டங்களின் 30% செலவை பொறுப்பு ஏற்கும்.
.