இந்தியாவின் காபி (coffee) கோடீஸ்வரர் சித்தார்த்த (VG Siddhartha) ஆற்றுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். இவரின் உடல் மங்களூர் பகுதில் உள்ள Netravati ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
.
ஞாயிறுக்கிழமை மேற்படி பாலத்தில் பயணிக்கையில், இவர் தான் சிறிது நடக்க விரும்புவதாகவும், தன்னை இறக்கிவிட்டு தொலைவில் சென்று காத்திருக்குமாறும் சாரதியிடம் கூறியுள்ளார். அனால் அவர் அரை மணிநேரமாக வராதபடியால் சாரதி பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
.
Cafe Coffee Day என்ற காபி நிலையங்களை ஆரம்பித்த இவர் 59 வயதுடையவர். இவர் தனது முதலாவது காபி கடையை 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் ஆரம்பித்தார். தற்போது இந்தியா, மலேசியா, நேபாளம், எகிப்து ஆகிய நாடுகளில் 1,750 Cafe Coffee Day கடைகள் உள்ளன. அந்த நிறுவனத்தில் தற்போது இவரிடம் 33% உரிமை உள்ளது.
.
தற்கொலைக்கு முன் இவர் Cafe Coffee Day நிறுவன பங்காளிகளுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் தானே அனைத்து முதலீட்டு தோல்விகளுக்கும் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
.