அமெரிக்காவை தளமாக கொண்ட மிகப்பெரிய நிறுவனங்களான Google, Apple, Facebook, Amazon போன்றவை மீது பிரான்ஸ் புதிய 3% விற்பனை வரி ஒன்றை நடைமுறை செய்கிறது. இதனை வன்மையாக சாடுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்.
.
மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் பெரும் வருமானத்தை உழைத்தாலும் பொதுவாக அந்த நாடுகளில் வரிகளை செலுத்துவது இல்லை. தமது தலைமையகத்தை அமெரிக்காவில் கொண்டதால், அவை அமெரிக்காவிலேயே வரியை செலுத்துகின்றன. இது தவறு என்கிறது பிரான்ஸ்.
.
Europian Commission கணிப்பின்படி சாதாரண வர்த்தகங்கள் சுமார் 23% வரியை அங்கு செலுத்துகின்றன. ஆனால் internet நிறுவனங்கள் சுமார் 8% அல்லது 9% வரியையே செலுத்துகின்றன.
.
பிரான்சின் இந்த புதிய வரியால் சினம் கொண்ட ரம்ப், பிரான்சின் ஜனாதிபதியின் நடவடிக்கையை foolishness என்றுள்ளார். அத்துடன் அமெரிக்கா பதிலுக்கு பிரான்சின் wine மீது புதிய வரியை அறவிடும் என்றும் கூறியுள்ளார்.
.
பிரான்சின் இந்த புதிய வரி வருடம் ஒன்றில் 850 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வருமானத்தையும், அதில் 25 மில்லியன் யூரோ வருமானத்தை பிரான்சில் பெறும் நிறுவங்கள் மீதே அறவிடப்படும்.
.