பாரிஸ் வெப்பநிலை 42.6 C

France

ஐரோப்பாவில் மீண்டும் வெப்பநிலை உக்கிரம் அடைந்துள்ளது. இன்று வியாழன் பாரிஸ் நகரில் 42.6 C (108.7 F) வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. இது அங்கு பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி கூடியது என்று கூறப்படுகிறது.
.
சுமார் 70 வருடங்களுக்கு முன் பரிசில் பதியப்பட்டு இருந்த வெப்பநிலையான 40.4 C ஐ இன்றைய வெப்பநிலை முறியடித்து உள்ளது. பிரான்ஸ் வெப்பநிலைக்கான red allert அறிவிப்பை விடுத்துள்ளது.
.
ஜெர்மனியில் முதல் முறையாக 38.1 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. நெதர்லாந்தில் 40.7 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது.
.
ஐரோப்பாவின் சில இடங்களில் தடவாளங்கள் வெப்ப விரிவால் வளைந்து உள்ளதால், ரயில் பயங்கள் தடைபட்டு உள்ளன. பெல்ஜியத்தில் இருந்து லண்டன் சென்ற Erostar ரயில் புதன்கிழமை இடைவழியில் கோளாறுக்கு உள்ளாகியது.

.