Facebook மீது $5 பில்லியன் தண்டம் விதிப்பு

Facebook

Facebook மீது அமெரிக்காவின் Federal Trade Commission (FCC) $5 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. Facebook பாவனையாளர்களின் விபரங்களை சட்டவிரோதமாக களவாட Facebook உடந்தையாக இருந்தமையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
.
2014 ஆம் ஆண்டில் Personality Quiz என்ற பெயரில் Facebook ஒரு App ஐ Facebook பாவனையாளருக்கு விடுத்திருந்தது. அந்த App இன் உள்நோக்கம் பாவனையாளரின் தகவல்களை சேகரித்து Cambridge Analytica என்ற அரசில் ஆய்வு/பிரச்சார நிறுவனத்துக்கு விற்பனை செய்வதே.
.
சுமார் 305,000 Facebook பாவனையாளரே இந்த App ஐ பயன்படுத்தி இருந்தனர். ஆனால் அவர்களின் Friends தொடர்புகள் மூலம் அந்த App சுமார் 87 மில்லியன் Facebook பாவனையாளரின் தகவல்கள் சேகரித்து Cambridge Analytica வுக்கு விற்பனை செய்துள்ளது.
.
சேகரித்த தரவுகளை பயன்படுத்தி Cambridge Analytica 2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருந்தது.
.
2018 ஆம் ஆண்டில் Cambridge Analytica சட்ட நெருக்கடிகள் காரணமாக bankruptcy க்கு பதிவு செய்திருந்தது.

.