திராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை

India

ஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு, கேரள ஆகிய நான்கு தென் மாநிலங்களும் இணைந்து 1997 ஆம் ஆண்டில் திராவிட மொழிகளை செம்மைப்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தன. குப்பம் நகரில் அமைத்துள்ள இந்த Dravidian University 2005 ஆம் ஆண்டில் தமிழ் Department ஒன்றை மொத்தம் நான்கு Faculty களுடன் ஆரம்பித்து இருந்தது.
.
இந்த வருடம் இங்கு தமிழில் MA பயில 20 மாணவர்களை உள்வாங்க பீடம் தீர்மானித்து இருந்தது. ஆனால் அங்கு MA பயில எவரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
.
மொழி மற்றும் மொழிபெயர்ப்பில் MA படிக்க கடந்த வருடம் 6 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்திய வருடம் 9 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த வருடம் ஒரு மாணவர் மட்டுமே நுழைமுக பரீட்சைக்கு வந்திருந்தார். ஆனால் அவரும் தனது MA படிக்கும் முயற்சியை மேற்கொண்டு தொடரவில்லை.
.
இங்கு MA மற்றும் Ph.D பயலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட்ட வசதிகள் மாநிலங்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
.
திருவாரூர் நகரில் உள்ள Central University என்ற பல்கலைக்கழகமும் போதிய மாணவர்கள் விண்ணப்பிக்காத நிலையில், இரண்டாம் நுழைவு பரீட்சையை நடாத்தி இருந்தது.
.