தென்னிந்தியாவை தளமாக கொண்ட ஆனந்தபவான் என்ற உணவாகத்தை ஆரம்பித்த ராஜகோபாலன் தனது 71 ஆவது வயதில் மரணமாகியதாக அவரின் சட்டத்தரணி கூறி உள்ளார். இந்த மாதம் 9ஆம் திகதியே இவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
.
2001 ஆம் ஆண்டில் இவரின் ஊழியர் ஒருவர் காணாமல்போயிருந்தார். தொலைந்தவரின் மனைவி ராஜகோபாலனே காரணம் என்று போலீசாரிடம் கூறி இருந்தார். சில நாட்களின் பின் ஊழியரின் சடலம் காடு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது. ஊழியர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.
.
இறந்தவரின் மனைவியை ராஜகோபாலன் திருமணம் செய்ய விரும்பியே அப்பெண்ணின் கணவரை கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.
.
ராஜகோபாலனுக்கு 2004 ஆம் ஆண்டிலேயே 10 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அது ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டு இருந்தது.
.
தனது உடல்நல குறைவை கருத்தில்கொண்டு தன்னை விடுதலை செய்யுமாறு ராஜகோபாலன் நீதிமன்றை கேட்டிருந்தார். ஆனால் ஜூலை இந்த மாதம் 9ஆம் திகதி அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அவர் போலீசாரிடம் சரண் அடைந்தார். அப்போது அவர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படார்.
.
உலகம் எங்கும் சுமார் 80 ஆனந்தபவான் உணவகங்கள் உண்டு.
.