சீனாவின் SINOPEC (China Petrolium and Chemical Corporation) என்ற எண்ணெய் நிறுவனம் தனது கிளையை இலங்கையில் ஆரம்பித்து உள்ளது. இந்த கிளை நிறுவனம் Fuel Oil Sri Lanka Company Ltd என இலங்கையில் பதியப்பட்டு உள்ளது.
.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தளம் கொண்ட இந்த நிறுவனம் அவ்வழியால் செல்லும் கப்பல்களுக்கு fuel oil வகை எண்ணெய் வழங்கும்.
.
SINOPEC GROUP உலகத்திலேயே மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும். இதன் வருட வருமானம் (Revenue) சுமார் $320 பில்லியன் ஆகும்.
.
சீனா உட்பட பல இடங்களில் SINOPEC பொதுமக்களின் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்கிறது.
.