கியூபாவில் முதல் முறையாக சீன தயாரிப்பு ரெயில் ஒன்று சீன தயாரிப்பு ரெயில் பெட்டிகளுடன் 915 km தூர பயணத்தை மேற்கொண்டு உள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு பின் அங்கு சேவையில் ஈடுபடும் புதிய ரெயில் இது.
.
கியூபாவில் 1830 ஆம் ஆண்டிலேயே ரெயில் சேவை நடைமுறைக்கு வந்திருந்தாலும், Cold War காலத்தில் அமெரிக்காவின் தடை காரணமாக ரெயில்கள், பெட்டிகள், தண்டவாளங்கள் அனைத்தும் பராமரிப்பு அற்று இருந்தன. தற்போது அவற்றை புதுப்பிக்கும் பணிக்கு சீனா அழைக்கப்பட்டு உள்ளது. கூடவே ரஷ்யாவும் சில பணிகளை செய்கிறது.
.
மொத்தம் 14 பெட்டிகளை கொண்ட இந்த புதிய வண்டி மேற்கே உள்ள தலைநகர் ஹவானாவில் (Havana) இருந்து சனிக்கிழமை கிழக்கே உள்ள Guantanamo வரையான 915 km தூரத்தை சுமார் 15 மணித்தியாலங்களில் கடந்தது. இந்த தூரத்தை பழைய ரெயில்கள் சுமார் 24 மணித்தியாலங்களில் கடந்து இருந்தன.
.
ரெயில்களும், பெட்டிகளும் புதிதாக இருந்தாலும் தற்போதும் பழைய தண்டவாளங்களே பாவனையில் உள்ளன. தண்டவாளங்களையும் திருத்தி அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டு உள்ளது. அங்கு சுமார் 4,200 நீள தண்டவாளங்கள் உள்ளன.
.
இதுவரை 80 பெட்டிகளை கியூபா பெற்றுள்ளது. மேலும் 250 பெட்டிகள் இந்த வருட முடிவுக்குள் கியூபாவை அடையும்.
.
அதேவேளை சீனா இலங்கைக்கு அனுப்பவுள்ள 9 விசேட டீசல் ரெயில்களையும், 90 ரெயில் பெட்டிகளையும் தயாரிக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. இவை 120 km/h வேகத்தில் செல்லவல்லன.
.
ஏற்கனவே 43 ரெயில்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது இலங்கையில் ஓடும் ரெயில்களில் அரை பங்கு சீன தயாரிப்புகள்.
.