அமெரிக்காவுள் நீர்மூழ்கி மூலம் போதை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அமெரிக்காவின் கரையேற பாதுகாப்பு படை (Coast Guard) பசுபிக் கரையோரம் கைப்பற்றி உள்ளது. இந்த நீர்மூழ்கியில் பல்லாயிரம் தொன் போதை இருந்ததாக கூறப்படுகிறது.
.
கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட போதைகளின் மொத்த பெறுமதி சுமார் $569 மில்லியன் என்று கூறப்படுகிறது. இக்காலத்தில் சுமார் 39,000 இறாத்தல் cocaine, 933 இறாத்தல் marijuuana என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன.
.
இந்த கடத்தல்களில் ஈடுபட்டிருந்த 55 பேர் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
.
போதையை கடத்த பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்றும், எந்தவொரு நாட்டிலும் முறைப்படி பதிவு செய்யப்படாதது என்றும் அமெரிக்க படை கூறுகிறது.
.