வளைகுடாவில் பிரித்தானிய கப்பல்களுக்கு ஆபத்து

Iran

ஈரானை அண்டிய பாரசீக வளைகுடா பகுதியில் தமது கப்பல்களுக்கு ஆபத்து உச்ச அளவில் உள்ளது (critical) என்கிறது பிரித்தானியா. அதனால் ஈரானின் கடல் பரப்புள் நுழையவேண்டாம் என்று தம்நாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு பிரித்தானியா கூறியுள்ளது.
.
நேற்று புதன்கிழமை ஈரானிய கடற்படை கப்பல்கள் பிரித்தானியாவின் British Heritage (274 மீட்டர் நீளம் கொண்டது) என்ற எண்ணெய் கப்பலை தடுக்க முனைந்ததாகவும், பின் பிரித்தானியாவின் HMS Montrose என்ற கடற்படை கப்பல் எண்ணெய் கப்பலை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
.
கடந்த கிழமை ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்றை பிரித்தானியா Gibraltar பகுதில் கைப்பற்றியது. ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீது விதித்த தடைகளை மீறி சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து சென்றதாகவே பிரித்தானியாவால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

.