Jet Airways என்ற இந்தியாவின் முன்னாள் விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்த Naresh Goyal இந்தியாவிலிருந்து வெறியேற இந்திய நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இவர் மீது இந்திய அரசால் தொடரப்பட்டுள்ள $2.6 பில்லியன் ஊழல் வழக்கு தொடர்பாகவே இவர் இந்தியாவுள் முடக்கப்பட்டு உள்ளார்.
.
இவர் ஆரம்பித்த Jet Airways விமான சேவை நிறுவனம் சிலகாலம் தரமான சேவையை அளித்து வந்தது. ஆனால் கடந்த சிலகாலமாக இந்த நிறுவனம் பெரு நட்டத்தில் செயல்பட ஆரம்பித்தது. இறுதியில் கடன்களை அடைக்க முடியாத நிலையில் bankruptcy வரை சென்றுள்ளது.
.
மேற்கூறிய தீர்ப்பை வழங்கிய நீதிபதி வேறு சிலரரை இந்தியா திருப்பி அழைக்க முடியாமல் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். அவர் பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும் Kingfisher விமான சேவையின் Vijay Mallya, வைர வியாபாரி Nirav Modi ஆகியோரையே அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். தம் மீது ஊழல் வழக்குகளை கொண்ட இவர்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
.
Jet Airways இந்திய வங்கிகளுக்கு மட்டும் $1.1 பில்லியன் கடன் செலுத்தவுள்ளது.
.