அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Las Angeles நகருக்கு வடகிழக்கே சுமார் 240 km தூரத்தில் உள்ள Ridgecrest என்ற சிறு நகரில் இன்று 7.1 அளவிலான (magnitude) நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இதே இடத்தில் 4 ஆம் திகதியும் 6.4 அளவிலான நிலநடுக்கம் நிகழ்துள்ளது.
.
வழமையாக 7.1 அளவிலான நிலநடுக்கம் பாரதூரமானது என்று கருதப்பட்டாலும், இன்றைய நிலநடுக்கம் Las Angeles நகருக்கு தொலைவில் இடம்பெறத்தால் பாதிப்புகள் மிக குறைவானவையே.
.
இன்றைய நடுக்கத்தின் காரணமாக பெரும் கல் பாறைகள் மலைகளில் இருந்து உருண்டு வீழ்ந்துள்ளன, வீதிகள் பிளந்து குழிகள் தோன்றியுள்ளன, சில வீடுகள் தீக்கு இறையாகின.
.
கடந்த 20 வருடங்களில் இன்றைய 7.1 அளவிலான நடுக்கமே அப்பகுதியில் மிகப்பெரியது. Las Angeles நகரில் இடம்பெறும் 7.0 அளவிலான அல்லது அதற்கு மேற்பட்ட பலம் கொண்ட நிலநடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
.
The San Andreas Fault என்ற, சுமார் 1,200 க்கும் நீளம் கொண்ட, பூமி ஓடுகள் மோதும் பகுதி கலிபோர்னியா ஊடே செல்கிறது.
.