எப்போதுமே உண்மைக்கு புறம்பான விசயங்களை தன் வாய்க்கு வந்தபடி கூறி, பின் அந்த தவறுகளையும் அலாட்டி மறுக்கும் பண்பு கொண்டவர் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். நேற்று ஜூலை 4 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலும் ரம்ப் இவ்வாறு ஒரு பெரிய தவறை கூறி, பின் முழு பூசணிக்காயை சோற்றுள் மறைப்பது போல் மறைக்கவும் முயன்றுள்ளார் ரம்ப்.
.
ரம்ப் மேடையில் ஆற்றிய தனது உரையில் அமெரிக்க புரட்சியாளர் 1770 ஆம் ஆண்டுகளில் விமான நிலையங்களை கைப்பற்றினர் என்று கூறியுள்ளார் (Our army manned the air, it rammed the ramparts, it took over the airports). உண்மையில் விமானம் 1903 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
.
இந்த தவறு தொடர்பாக பின்னர் கேட்டபோது, அந்த தவறுக்கு மழை காரணமாக teleprompter கருவியை (வாசிப்பவருக்கு பேச்சை காண்பிக்கும் கருவி) தன்னால் சரியாக வாசிக்க முடியவில்லை என்றுள்ளார். உண்மையில் அவர் கூறிய வசனங்கள் அவரின் சொந்த இடைச்செருகல் என்று யாவரும் அறிவர்.
.