பிரான்ஸில் வெப்பநிலை 45.9 C

France

ஐரோப்பிய நாடுகள் அதீத வெப்பநிலையை அடைந்துள்ளன. பிரான்ஸ் இன்று 45.9 C (114.6 F) வெப்பநிலையை அடைந்துள்ளது. இதுவே வரலாற்றில் அங்கு பதியப்பட்ட அதிகூடிய வெப்பநிலை ஆகும். இந்த வெப்பநிலை Gallargues-le-Montueux என்ற இடத்தில் பதியப்பட்டு உள்ளது.
.
இதற்கு முன் பிராஸில் அதிகூடிய பதியப்பட்ட வெப்பநிலையாக 2013 ஆம் ஆண்டு நிலவிய 44.1 C வெப்பநிலை இருந்துள்ளது.
.
பொதுவாக பிரான்ஸின் தென் பகுதியே கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. பெருபாலான தென் பகுதிகள் 40 C அல்லது அதற்கு மேலான வெப்ப நிலையை கொண்டுள்ளன.
.
ஜெர்மனி, Czech Republic, போலந்து ஆகிய நாடுகள் பதியப்பட்ட வரலாற்றுக்கான அதிகூடிய ஜூன் மாத வெப்பநிலையை அடைந்துள்ளன.

.