தாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி

Dharavi

இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள தாராவி (Dharavi) என்ற சேரி இந்தியாவின் பிரபல தாஜ்மகாலிலுக்கும் மேலாக உல்லாசப்பயணிகள் கணிப்பு ஒன்றில் இடம்பெற்று உள்ளது. TripAdvisor என்ற பிரபல உல்லாச பயண சேவைகள் நிறுவனம் மேற்கொண்ட கணிப்பு ஒன்றிலேயே தாராவி சேரி இந்தியாவுள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
.
TripAdvisor நடாத்திய இந்திய அளவிலான Top 10 Experience கணிப்பில் உல்லாச பயணிகள் தாராவி சேரிக்கு முதலிடம் வழங்கி உள்ளனர். அது மட்டுமன்றி தாராவி ஆசியாவுக்கான ’10 Travelers’ Choice Experiences 2019′ என்ற பட்டியியலில் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
.
சுமார் ஓர் மில்லியன் ஏழை மக்களை கொண்ட இந்த சேரியை சுற்றிக்காட்ட சுற்றுலா நிறுவனங்கள் பலவும் உருவாகியுள்ளன. Slumdog Millionaire என்ற Hollywood  திரைப்படமும் இந்த சேரி பிரபல்யம் அடைய வழிவகுத்தது.
.
ஒருகாலத்தில் சதுப்பு நிலமாக இருந்த பகுதியில் வறியவர்கள் குடியேற, விரைவில் தாராவி சேரி உருவாகியது. இங்கு வசிப்போர் தோல் தயாரிப்பு, மட்பாண்டம் தயாரிப்பு, துணிவகை தயாரிப்பு ஆகிய தொழிகளில் ஈடுபடுகின்றனர். மும்பை நகருக்கு தேவையான கூலி வேலையாட்களையும் இந்த சேரியே வழங்கி வருகிறது.

.