பம்பியோ இலங்கை பயணம் இடைநிறுத்தம்

SriLankaIndia

அமெரிக்க வெளியுறவு செயலாளர் பம்பியோவின் (Mike Pompeo) இலங்கை பயணம் திடீரென இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. வேறு நிகழ்வுகள் காரணமாக இலங்கை பயணம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
.
தன்னால் இலங்கைக்கு இம்முறை பயணம் செய்ய முடியாமைக்கு வருந்துவதாகவும், எதிர்வரும் காலத்தில் தான் பயணிக்க விரும்புவதாகவும் பம்பியோ கூறி உள்ளார்.
.
ஆனாலும் இவர் இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு திட்டமிட்டபடி தனது பயணத்தை ஜூன் 24 – 30 காலப்பகுதில் மேற்கொள்வார்.
.
பம்பியோவும் ஜனாதிபதி ரம்பும் G20 அமர்வின்போது ஜப்பானில் சீன ஜனாதிபதி சீயுடன் உரையாடுவார். அதற்கு முன் சீ வடகொரியா தலைவர் கிம்மை வடகொரியாவின் சந்திப்பார். சுமார் 14 வருடங்களின் பின் சீன தலைவர் ஒருவர் வடகொரியா செல்வது இதுவே முதல் தடவை.

.