ரஷ்யாவை பின் தள்ளியது சீன கடற்படை?

ChinaRussia

சீனாவின் கடற்படை ரஷ்யாவின் கடற்படை வல்லமைக்கும் மேலாக வளர்ந்து, ரஷ்யாவின் கடற்படையை பின் தள்ளிவிட்டது என்கிறது German Institute for International and Security Affairs என்ற ஆய்வு அமைப்பு.
.
சீனாவின் கடற்படை இந்த வளர்ச்சியை ரஷ்யாவின் கடல்படையுடன் இணைந்து செய்துகொண்ட பயிற்சிகள், அறிவு பரிமாற்றங்கள் ஆகியன மூலமே பெற்றது என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு அமைப்பு. ஆனாலும் ரஷ்சியா சீனாவின் வளர்ச்சியையிட்டு பெரிதும் கவலை கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பலத்தை முறியடிக்க சீனாவின் பலத்தை எதிர்பார்க்கிறது ரஷ்யா.
.
தற்போதைய சீன ஜனாதிபதி Xi JinPing ரஷ்ய ஜனாதிபதி பூட்டினுடன் நல்ல உறைவை வளர்த்து வந்துள்ளார்.
.
அமெரிக்காவிடம் அதிக விமானம் தாங்கி கப்பல்கள் போன்ற பாரிய அளவிலான யுத்த கப்பல்கள் இருந்தாலும், தற்போது சீனாவிடமே அதிக எண்ணிக்கையான யுத்த கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய அளவிலான யுத்த கப்பல்கள் சுமார் 300 அளவில் உள்ளன.
.
தற்போதும் ரஷ்யாவே கீழ் கடலிலான (under sea) ஆயுத வல்லமையில் முன்னணியில் உள்ளது.

.