கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் பல தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து சுமார் 250 பேரை பலியாக்கிய செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் Hayathu Mohamed Ahmed Milhan என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இண்டர்போல் (Interpol) அமைப்பு கூறியுள்ளது.
.
இவருடன் மேலும் 4 பேர் அடையாளம் அறிவிக்கப்படாத மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வெள்ளிக்கிழமை இலங்கையை அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை சுமார் 102 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.