பாக்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Asif Ali Zardari இன்று தனது இஸ்லாமபாத் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது பல மில்லியன் டாலர் பணத்தை நாட்டில் இருந்து வெளியே எடுத்து சென்றார் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது சகோதரி மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் ஆயிரக்கணக்கான பொய் வங்கி கணக்குகள் மூலமே சுமார் $400 மில்லியன் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
.
ஆனால் இந்த குற்றசாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி. தற்போதைய பிரதமர் இம்ரான் கான் பல எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து வருகிறார்.
.
முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான Zardari 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர்.
.