ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு Huawei என்ற சீன நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை அமெரிக்காவுள் முழுமையாக தடை செய்த நிலையில், ரஷ்யா Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை நடைமுறை செய்யவுள்ளது. MTS என்ற ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனமே Huawei நிறுவனத்துடன் இணைந்து செய்யப்படவுள்ளது.
.
இந்த அறிவிப்பு சீன ஜனாதிபதி ரஷ்யாவுக்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள காலத்திலேயே வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் 5G தொழிநுட்பத்தில் இணைவது அமெரிக்க ஆதரவு கொண்ட 5G நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமையும்.
.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்க கனடா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை தடை செய்துள்ளன. ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்பத்தை தடை செய்யவில்லை.
.