கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பாகங்களில் வெப்பநிலை கொடுமையாக உள்ளது. இதன் காரணமாக மக்களை தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்த வேண்டாம் என்று கேட்டுள்ளது அரசு. பதிலாக குளிர் பானங்களை அருந்தவும், பழங்களை உண்ணவும் மக்கள் கேட்கப்பட்டு உள்ளனர்.
.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Churu என்ற நகரிலேயே அதி கூடிய வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்கு வெப்பநிலை 50.6 C ஆக இருந்துள்ளது. திங்கள் வெப்பநிலை 50.3 C ஆகவும், செவ்வாய் 48.0 C ஆகவும் இருந்துள்ளது.
.
டெல்கியில் கடந்த ஞாயிறு வெப்பநிலை 44.6 சி ஆக இருந்துள்ளது.
.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெப்ப கொடுமைக்கு 17 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
கடந்த 65 வருடகால தரவுகளின்படி இந்தியாவில் இந்த வருட வெப்ப கொடுமை இரண்டாம் இடத்தில் உள்ளது.
.