இந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி?

Modi

இந்தியாவில் மீண்டும் மோதி தலைமையிலான அரசே ஆட்சிக்கு வரும் என்று வாக்கெடுப்பின் பின்னரான கணிப்புகள் (exit polls) கூறுகின்றன. மொத்தம் 542 ஆசனங்களில் மோதியின் பா.ஜ. கட்சி தலைமையிலான National Democratic Alliance (NDA) என்ற கூட்டணிக்கு 287 முதல் 350 வரையிலான ஆசனங்கள் கிடைக்கலாம் என்று வெவ்வேறு கணிப்புகள் கூறுகின்றன.
.
இன்று ஞாயிறு முடிந்த இந்தியாவின் 17 ஆவது பொது தேர்தலில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க குறைந்தது 272 ஆசனங்கள் தேவை.
.
2014 ஆம் ஆண்டில் மோதியின் தலைமையிலான NDA அணி 336 ஆசனங்களை வென்றிருந்தது. அத்தொகை இம்முறை கிடைப்பது கடினமாகலாம்.
.
2014 ஆம் ஆண்டு 66 ஆசனங்களை வென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான United Progressive Alliance (UPA) அணி இம்முறை சற்று அதிக ஆசனங்களை பெறும் என்றாலும், ஆட்சியை அமைக்க போதிய ஆசனங்களை பெற முடியாமல் இருக்கும்.
.
சட்டப்படியான முடிபுகள் மே 23 ஆம் அல்லது 24 ஆம் திகதிகளிலேயே வெளிவரும்.

.