அமெரிக்க டாலர் நாணய கணிப்புப்படி உலகில் தற்போது சுமார் 1,942 பில்லினியர் உள்ளனர். அதாவது இவர்களிடம் $1,000,000,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. அதில் பெரும் பகுதி நிலையற்ற பங்குசந்தை (stock market) சொத்தாகவும் இருக்கும்.
.
Wealth-X என்ற அமைப்பின் ஆய்வின்படி உலகின் மொத்த பில்லினியர்களில் 79% செல்வந்தர் $6.8 டிரில்லியன் ($6,800 பில்லியன்) சொத்தை கொண்டுள்ளனர். இவர்கள் பின்வரும் 15 இடங்களில் வாழ்கின்றனர்.
.
அமெரிக்காவிலேயே அதி கூடிய பில்லினியர்கள் வாழ்கின்றனர். அங்கு வாழும் பில்லினியர் தொகை 705. அதற்கு அடுத்து சீனாவில் 285 பில்லினியர் வாழ்கின்றனர். சீனாவையும் Hong Kongகையும் இணைத்து ஒரு நாடாக கணிப்பிடால், சீனாவில் 372 பில்லினியர் உள்ளனர். அவர்களிடம் $1.255 டிரில்லியன் (1,255 billion) சொத்துக்கள் உண்டு.
.
Place | Billionaires | Total Wealth |
1. USA | 705 | $ 3.013 trillion |
2. China | 285 | $ 996 billion |
3. Germany | 146 | $ 442 billion |
4. Russia | 102 | $ 335 billion |
5. UK | 97 | $ 209 billion |
6. Switzerland | 91 | $ 240 billion |
7. Hong Kong | 87 | $ 259 billion |
8. India | 82 | $ 284 billion |
9. Saudi | 57 | $ 147 billion |
10. France | 55 | $ 195 billion |
11. UAE | 55 | $ 165 billion |
12. Brazil | 49 | $ 154 billion |
13. Italy | 47 | $ 141 billion |
14. Canada | 45 | $ 87 billion |
15. Singapore | 39 | $ 84 billion |
.