கடந்த சில தினங்களாக வளைகுடா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களை செய்வோர் யார் என்று இதுவரை அறியப்படவில்லை. ஆனால் பெரும்பாலான தாக்குதல்கள் சவுதி, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய இரு நாடுகளின் கட்டமைப்புகள் மீதே இடம்பெற்று உள்ளன.
.
ஞாயிற்று கிழமை சவுதி அரேபியாவுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் UAE க்கு அருகே நிலைகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகின. ஒரு கப்பலில் 3 சுமார் மீட்டர் அளவிலான துவாரம் ஏற்பட்டுள்ளது.
.
அத்துடன் நோர்வே, டுபாய் ஆகிய இடங்களில் பதியப்பட்ட வேறு இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்களும் கூடவே தாக்குதலுக்கு உள்ளாகின.
.
இன்று செவ்வாய் சவுதிக்கு சொந்தமான Pump Station 8, Pump Station 9 ஆகிய இரண்டு எண்ணெய் கட்டமைப்புகள் ஆளில்லா விமானம் (drone) கொண்டு தாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிலையங்களும் Aramco என்ற நிறுவனத்துக்கு சொந்தமானவை. இவை சவுதியின் கிழக்கே எடுக்கப்படும் எண்ணெய்யை மேற்கே உள்ள செங்கடல் துறைமுகத்துக்கு எடுத்து செல்ல பயன்படும். இப்பகுதியில் ஈரானின் ஆதரவு கொண்ட Houthi ஆயுத குழு செயல்படுகிறது.
.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக சவுதியும், அமெரிக்காவும் ஈரான் மீது சந்தேகம் கொண்டுள்ளன. ஆனால் தம் மீது குற்றம் சுமத்துவதற்காக மூன்றாம் நபர்கள் (இஸ்ரேல்) செய்த சூழ்ச்சியே இது என்கிறது ஈரான்.
.