யுத்த குற்ற மறைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்

USFlag

அமெரிக்காவின் Navy SEAL என்ற விசேட இராணுவ படைகளின் அதிகாரி (platoon leader) செய்த யுத்த குற்றங்களை (war crimes) இராணுவத்தின் மேல் அதிகாரிகள் மூடிமறைக்க முயன்றுள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட The New York Times பத்திரிகை செய்தி கூறியுள்ளது. இந்த குற்றங்களை கண்ட கீழ்மட்ட SEAL உறுப்பினர்கள் உண்மையை உயர் அதிகாரிகளுக்கு கூறியபோது, உண்மைகளை கூறிய SEAL உறுப்பினர்களே எச்சரிக்கப்பட்டனராம்.
.
Navy SEAL commando படையின் platoon leader Edward Gallagher தம்மால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரை குத்தி கொலை செய்தது, பாடசாலை வயது சிறுமி ஒருத்தியையும், முதியவர் ஒருவரையும் குறிபார்த்து (sniper) சுட்டு கொலை செய்தது, கண்மூடித்தனமாக ஏவுகணைகளை ஏவியது போன்ற குற்றங்களை செய்ததாகவே அவரின் கீழ் சேவையாற்றிய SEAL உறுப்பினர் கூறி உள்ளனர். மேற்படி சம்பவங்கள் ஈராக்கில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
.
தமது முறைப்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்படுவதை உணர்ந்த ஏழு SEAL உறுப்பினர்களும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் San Diego நகரில் உள்ள தமது தளபதிக்கு கூறி உள்ளனர். அப்போதும் குற்றத்தை எடுத்துக்கூறிய 7 SEAL உறுப்பினர்களே எச்சரிக்கப்பட்டனராம். குற்றம் சாட்டப்பட்ட platoon leader Edward Gallagher ரும், படை தளபதி Robert Breisch உம் நண்பர்களாம்.
.
அந்த 7 உறுப்பினர்கள் தொடர்ந்தும் முறைப்பாடு செய்தால் அவர்களை SEAL படையில் இருந்து நீக்கவுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளார். ஆனாலும் அவர்கள் தமது படையணிகளுக்கு அப்பால் சென்று முறையிட்டு உள்ளனர்.
.
Edward Gallagher (வயது 39) மீது அவரின் கீழ் செயல்படும் SEAL உறுப்பினர்களால் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர், உயர் அதிகாரிகள் Gallagher க்கு Bronze Star பதக்கமும் வழங்கி உள்ளனர்.
.
அந்த 7 SEAL உறுப்பினர்களும் இறுதியில் Navy Criminal Investigation Service என்ற அமைப்புக்கு உண்மைகளை கூறிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் Edward Gallagher கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீதான வழக்குகள் மே 28 ஆம் திகதி ஆரம்பமாகும்.
.
International Criminal Court விசாரணையின் கண்ணில் உள்ளவர்களில் Gallagher ரும் ஒருவர். இதை விசாரிக்க சென்ற ICC அதிகாரியின் விசாவே அண்மையில் பறிக்கப்பட்டது.
.
ஒசாமா பின் லாடனை கொலை செய்வது போன்ற அதி உயர் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் SEAL படையே அனுப்பப்படும்.
.