தாய்வானில் தலைமையகத்தை கொண்டுள்ள Foxconn என்ற இலத்திரனியல் தயாரிப்பு நிறுவனத்தின் CEO Terry Gou, KMT (KuoMinTang) கட்சி சார்பில், தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவரின் வரவு தற்போதைய ஜனாதிபதிக்கு பலத்த போட்டியாக இருக்கும்.
.
Democratic Progressive Party என்ற கட்சியை சார்ந்த தற்போதைய ஜனாதிபதி Tsai Ing-wen அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆதரவுடன் சீனாவை சாடி வருபவர். அத்துடன் தாய்வான் ஒரு சுதந்திர நாடு என்றும் கூறி வருபவர். ஆனால் KMT கட்சியை சார்ந்த Terry Gou சீனாவுடன் இணங்கி செய்யப்பட விரும்புபவர்.
.
KMT கட்சியை 1949 ஆம் ஆண்டில் மா ஓ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of China) தாய்வானுக்கு விரட்டி இருந்தாலும், தற்போது KMT சீனாவுடன் நட்பு கொள்கையை கையாள விரும்புகிறது.
.
Foxconn உலகத்தில் 5ஆவது பெரிய நிறுவனம். இதன் ஊழியர் தொகை சுமார் 803,000. 2017 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருமானம் $4.7 ட்ரில்லியன் (4,700 பில்லியன்). இதன் நிகர இலாபம் மட்டும் சுமார் 135 பில்லியன். பெருமளவு Foxconn தொழிச்சாலைகள் சீனாவிலேயே உள்ளன.
.
Terry Gou வின் மொத்த சொத்துக்கள் சுமார் $7.6 பில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இவரே தாய்வானின் முதலாவது பணக்காரர் ஆவார். இவர் 1974 ஆம் ஆண்டு Hon Hai (இப்போது Foxconn) என்ற நிறுவனத்தை $7,500 முதலீட்டுடன் ஆரம்பித்தார். அப்போது இந்த நிருவனம் பிளாஸ்டிக் பாகங்களையே உற்பத்தி செய்தது.
.