சர்வதேச குற்ற நீதிமன்றின் (International Criminal Court) விசாரணையாளரான Fatou Bensoudaவின் அமெரிக்க விசா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை அமெரிக்காவின் State Department நேற்று வெள்ளி உறுதி செய்துள்ளது.
.
ஆப்கானித்தானில் அமெரிக்காவின் படைகள் குற்ற செயல்களை செய்தனரா என்பதை விசாரணை செய்யவே Fatou Bensouda அமெரிக்கா செல்லவிருந்தார்.
.
ICC விசாரணையாளரின் விசா பறிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் சுதந்திரத்தையும், அதன் மக்களை நேர்மையற்ற விசாரணைகளில் இருந்து பாதுகாக்கவும் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றுள்ளது State Department.
.
அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ ICC தண்டிக்க அமெரிக்கா அனுமதி வழங்காது என்று பலதடவைகள் கூறியுள்ளது அமெரிக்கா. ICC யும் இதுவரை வலிமை இழந்த, மூன்றாம் உலக நாடுகளின் நபர்களையே தண்டித்து உள்ளது. அதனால் ICC மீது நம்பிக்கையை இழந்த சில ஆபிரிக்க நாடுகள் ICC அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளன.
.
வலிமை குன்றிய நாடுகள் ICC க்கு பயப்பட, ICC அமெரிக்காவுக்கு பயப்படும் நிலையே தொடர்கிறது.
.
Fatou Bensouda அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள ஐ.நா. வுக்கு பயணிக்க தொடர்ந்தும் உரிமை உண்டு என்றும் கூறப்படுகிறது.
.