இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) என்பவர் அமெரிக்காவில் பங்கு சந்தை மோசடிகள் காரணமாக 11 வருட சிறையை அனுபவித்து வருகிறார். இவர் பெரிய நிறுவனக்களின் தரவுகளை களவாக பெற்று அதற்கு ஏற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு அல்லது விற்பனை செய்து அதன் மூலம் சட்டவிரோத இலாபம் பெற்றுவந்துள்ளார். அந்த குற்றம் நிறுபிக்கப்பட்டதாலேயே அவர் 11 வருட சிறை தண்டனை பெற்றார்.
இப்போது அவரின் தம்பியார் ரெங்கன் என்பவர் மீது வழக்கு தொடர்கிறது அமெரிக்க அரசு. இவரும் அண்ணன் ராஜ் உடன் சேர்ந்து குற்றம் புரிந்தார் என்கிறது அமெரிக்க அரசு. அண்ணன் ராஜ்ஜை கூட இவ்வகை தொழிலில் முதலில் இறங்கிய தம்பி ரெங்கன் தான் உள் இழுத்தார் என்கின்றனர் சில விடயம் அறிந்தவர்கள்.
ரெங்க இப்போது தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வாழ்கிறார். ஆனால் அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் சந்தேக நபர்களை பரிமாறும் உண்டன்படிக்கை உண்டு.