அனைத்தையும் கேட்டார் ரம்ப், சந்திப்பை முறித்தார் கிம்

TrumpKim

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் (Hanoi) பெப்ருவரி மாதம் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிய காரணமாக அமைந்த விடயத்தை ராய்டேர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரம்பின் வேண்டுகோள் பட்டியல் கிம்மை ஆத்திரமூட்ட, பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முறிந்திருந்தது.
.
Reuters கூற்றுப்படி கிம்மிடம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அமெரிக்காவிடம் வழங்கும்படி ரம்ப் கேட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க மற்றும் சர்வதேச அணுவாயுத நிபுணர்கள் அனைவரும் வடகொரிய அணு திட்டங்களை நேரில் பார்வையிடவும், வடகொரியாவின் அனைத்து அணு செயல்பாடுகளை நிறுத்தவும், அனைத்து அணு ஆய்வு நிலையங்களையும் இல்லாதொழிக்கவும் ரம்ப் கேட்டுள்ளார்.
.
ரம்பின் இந்த திடீர் வேண்டுகோள்கள் கிம்மை கோபமூட்ட, அவர் அடுத்து இடம்பெறவிருந்த மத்திய உணவு சந்திப்பை இரத்து செய்துள்ளார்.
.
பேச்சுக்கள் முறிய, ரம்ப் உடனேயே அமெரிக்கா திரும்பினார். கிம் மேலும் சில நாட்கள் அங்கு தங்கி பின் வடகொரியா சென்றார்.

.