கனடிய எல்லையோரம் உள்ள அமெரிக்காவின் North Dakota மாநிலத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட உயிரின எச்சங்கள் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய மெக்ஸிகோ பகுதியில் வீழ்ந்து மோதிய விண்கல்லின் விளைவு என்று அகழ்வாய்வு கருதுகிறது.
.
North Dakota மாநிலத்து Bowman நகர் பகுதியில் அகழ்வு ஆய்வில் ஈடுபட்ட 12 ஆய்வாளர்களே இந்த எச்சங்களை கண்டுள்ளனர். இந்த அகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
.
சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் மெக்ஸிகோவின் Yucatan குடாவில் வீழ்ந்த விண்கல் அப்பகுதியில் மிக பெரிய குழியை ஏற்படுத்தி (Chicxulub, விட்டம் 150 km, ஆழம் 20 km), தொடர்ந்து மிக பெரிய சுனாமியை உருவாக்கி, அந்த சுனாமி North Dakota வரை பல்லாயிரம் மைல்கள் பரவி அங்கே மரணித்த கடல் உயிரினங்களை ஒதுக்க, அவை மண்ணுக்குள்ளே அகப்பட்டுள்ளன என்று கருதுகிறது அகழ்வாய்வு விஞ்ஞானம்.
.
இந்த அகழ்வில் மீன்கள் மட்டுமன்றி, முறிந்த மரங்கள், எறிந்த மர துண்டுகள், தாவரகங்கள் என்பனவும் காணப்படுள்ளன.
.
.
படங்ககள்: University of Kansas.
.