சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலி இன்று சனிக்கிழமை இணைந்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடு இத்தாலியே.
.
அதேவேளை அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன. அதில் இத்தாலி இணைவதை கடுமையாக எதிர்த்துள்ளன. ஆனாலும் இத்தாலி தனது நன்மை கருதி சீனாவுடன் இணைந்துள்ளது.
.
இன்று இத்தாலி சென்றுள்ள சீன ஜனாதிபதி தலைமையிலான குழு இத்தாலிய நிறுவனங்களுடன் சுமார் $2.8 பில்லியன் பெறுமதியான 29 திட்டங்களில் ஒப்பம் இட்டுள்ளன. சீனாவின் BRI திட்டத்தில் இத்தாலியின் கிழக்கே உள்ள Trieste மற்றும் மேற்கே உள்ள Genoa துறைமுகங்களும் அங்கம் கொள்ளும்.
.
சீனாவின் Huawei நிறுவனத்தையும் அதன் 5G தொலைத்தொடர்பு உபகரணங்களையும் உலகம் எங்கும் தடை செய்ய முயலும் அமெரிக்காவுக்கு முரணாக இத்தாலி Huawei நிறுவனத்தின் 5G உபகரணங்களை பயன்படுத்தவும் இணங்கி உள்ளது.
.
இலங்கையும் சீனாவின் BRI திட்டத்தில் ஒரு அங்கம்.
.