அமெரிக்க பல்கலைக்கழக அனுமதியுள் ஊழல்

YaleStanford

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெற பெற்றார் பெரும் தொகை இலஞ்சம் வழங்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக சுமார் 50 பேர் இன்று செவ்வாய் கைது செய்யப்பட்டும் உள்ளனர். கைது செய்யப்பட்டோருள் பல பிரபல ஹொலிவூட் நடிகைகளும் அடங்குவர். அவர்களுடன் மொத்தம் 33 பெற்றாரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
.
அமெரிக்காவின் பிரபல Yale (1701), Stanford University (1891), University of Southern California, Wake Forest ஆகிய பல்கலைக்கழகங்களும் இந்த ஊழல் குற்றசாட்டுள் அடங்கி உள்ளன.
.
கைது செய்யப்பட்ட பெற்றாருள் தொலைக்காட்சி நடிகை Lori Loughlin, அவரின் கணவர், நடிகை Felicity Huffman, William McGlashan, fashion designer Mossimo Giannulli ஆகியோரும் அடங்குவர். அனுமதி பெற்ற பெரும்பாலான பிள்ளைகளுக்கு பெற்றார் ஊழல் செய்தமை தெரியாது.
.
இந்த விசாரணையின் மத்தியில் உள்ளவர் William Singer என்பவரே. இவரிடம் 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பல பெற்றார் சுமார் $25 மில்லியன் இலஞ்சமாக வழங்கி உள்ளனர். அவர் அப்பணத்தை பொய் ஆவணம் தாயாரித்தல், அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கல் போன்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி உள்ளார். William Singer தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
.
ஒரு மாணவியின் அனுமதி பத்திரத்தில் அவர் ஒரு நீச்சல் விளையாட்டு வீராங்கனை என்று கூறி, கூடவே ஒரு பெண் நீச்சல் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அப்படத்தில் விளையாடும் பெண் வேறு ஒருவர்.

.