பல நாடுகளில் 737 MAX-8 பாவனை இடைநிறுத்தம்

737MAX8

ஞாயிற்று கிழமை Ethiopian Airlines க்கு உரிய Boeing 737 MAX-8 விமானமும் (157 பேர் பலி), கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் Lion Air க்கு உரிய 737 MAX-8 விமானமும் (189 பேர் பலி) ஏறக்குறைய ஒரே முறையில் வீழ்ந்து நொறுங்கியதன் பின் பல நாடுகள் அவ்வகை விமானங்களை தமது நாடுகளில் இடைநிறுத்தம் செய்துள்ளன.
.
2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த அதிநவீன விமானத்தில் பாரதூர கட்டமைப்பு (design) குறைபாடு இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.
.
ஆனாலும் அமெரிக்காவுடன் நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை கொண்ட நாடுகள் தொடர்ந்து தம்மிடம் உள்ள MAX-8 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி உள்ளன.
.
சீனாவின் China Southern (22 விமானங்கள்), Air China (15 விமானங்கள்), Hainan Airlines (11), Shanghai Airlines (11), Xiamen Airlines (10), Shandong Airlines (7), Shenzhen Airlines (6), China Eastern (4), Fuzhou Airlines (2), Kunming Airlines (2) ஆகிய விமான சேவைகள் தமது MAX-8 விமானங்களை சேவையில் இருந்து நிறுத்தி உள்ளன.
.
இந்தோனேசியாவின் Lion Air (10 விமானங்கள்), Ethiopian Airlines (4), Lucky Air (3) ஆகிய விமான சேவைகளும் இவ்வகை விமானங்களின் பாவனையை நிறுத்தி உள்ளன.
.
ஆனால் அமெரிக்காவின் Southwest Airlines (34 விமானங்கள்), American Airlines (24), கனடாவின் Air Canada (24), WestJet (13), Sunwing (4), Norwegian Air (18), SpiceJet (13), Jet Airways (9) போன்ற விமான சேவைகள் தொடர்ந்தும் MAX-8 வகை விமானங்களை பயன்படுத்துகின்றன.
.
அமெரிக்காவின் Boeing நிறுவனத்தின் MAX-8 வகை விமானத்துக்கு போட்டியாக சீனா Comac 919 என்ற விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐரோப்பாவின் Airbus நிறுவனமும் A320 Neo என்ற விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

.