103 km நீள Helsinki-Tallin கடலடி தண்டவாளம்

Helsinki

பின்லாந்தின் தலைநகர் Helsinki ஐயும், Estonia வின் தலைநகர் Tallinn ஐயும் இணைக்க 103 km நீளம் கொண்ட கடலடி தண்டவாளம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான $17 பில்லியன் முதலீட்டை சீனாவின் Touchstone Capital Partners வழங்கவுள்ளது. Touchstone சீனாவின் Belt and Road திட்டத்தில் ஒரு முக்கிய பங்காளி.
.
திட்டமிடுபவர்கள் இந்த தண்டவாளம் 2024 ஆம் ஆண்டு அளவில் சேவைக்கு வரும் என்று கணிப்பிட்டு இருந்தாலும், நிர்மாண வேலைகளுக்கு அதிலும் கூடிய காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
.
தற்போது இரண்டரை (2.5) மணித்தியால கப்பல் (ferry) சேவைமூலம் கடக்கும் இந்த Gulf of Finland நீரை புதிய tunnel அரை (0.5) மணித்தியாலத்தில் கடக்க உதவும்.
.
நிர்மாணிப்பின் பின்னர் இதுவே உலகின் மிக நீண்ட கடலடி தண்டவாளமாக இருக்கும்.
.
சுமார் 53.9 km நீளம் கொண்ட ஜப்பானின் வடபகுதியில் உள்ள Seikan Tunnel தற்போதைய அதிநீள கடலடி tunnel ஆகும். இதன் கடலுக்கு கீழான பகுதி மட்டும் 23.3 km கொண்டது. 1954 ஆம் ஆண்டு அங்கு சேவையில் இருந்த Toya Maru என்ற கப்பல் (ferry) சூறாவளில் அகப்பட்டு தாண்டதில் 1,153 பேர் பலியாகி இருந்தனர். அதன் பின்னரே Seikan tunnel கட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதை கட்டிமுடிக்க சுமார் 24 வருடங்கள் தேவைப்பட்டது.
.
பிரித்தானியாவையும், பிரான்ஸையும் இணைக்கும் Channel Tunnel 50.5 km நீளம் கொண்டது. அதில் 37.9 km நீளமான பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.
.
அதேவேளை சீனா 122 km நீளம் கொண்ட கடலடி தண்டவாளம் ஒன்றை சீனாவின் வடகிழக்கு பகுதில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன் 90 kmநீளமான பகுதி கடலுக்கு அடியில் அமையும். அது Dalian என்ற நகரையும், Yantai என்ற நகரையும் Bohai கடலுக்கு அடியால் கடக்க உதவும். இதற்கு சுமார் $32 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த tunnel தற்போதைய 8 மணித்தியால பயணத்தை, 40 நிமிட பயணமாக்கும்.
.