இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானின் யுத்த விமானங்களால் இந்து சமுத்திரத்தில் தாக்கி அமிழ்த்தப்பட்ட அஸ்ரேலிய யுத்த கப்பலான destroyer HMAS Vampire (D68) சமுத்திரத்தின் அடியில் உள்ள இடம் இலங்கை மற்றும் அஸ்ரேலிய கடல்படைகளால் கண்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
.
இரண்டாம் உலக யுத்த காலத்தில், 1942 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி, ஜப்பான் அந்தமான் தீவுகளை கைப்பற்றி இருந்தது. அதை தொடர்ந்து இலங்கையும் ஜப்பானியர்களால் கைப்பற்றப்படலாம் என்று கருதப்பட்டது.
.
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி சுமார் 125 ஜப்பானிய யுத்த விமானங்கள் கொழும்பை தாக்கின. அப்போது திருகோணமலையில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் விமானம் தாங்கி கப்பலான HMS Hermes ஐயும் அதன் பாதுகாப்புக்கு நின்ற அஸ்ரேலியாவின் HMAS Vampire என்ற தாக்கியழிக்கும் கப்பலையும் திருகோணமலையில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. அவ்வாறு அவை கடலுள் புகுந்தாலும், மட்டக்களப்புக்கு கிழக்கே இவை ஜப்பானிய யுத்த விமானங்களால் ஏப்ரல் 9 ஆம் திகதி தாக்கி அழிக்கப்பட்டன.
.
அழிக்கப்பட்ட விமானம் தங்கியில் அப்போது யுத்த விமானங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. அதில் இருந்த 307 படையினர் பலியாகினர். ஏனையோர் காப்பாற்றப்பட்டனர். Vampire ரில் இருந்த 8 படையினர் பலியாகினர்.
.