புதன் கிழமை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய இந்திய MiG விமானத்தின் விமானியைஉள்ளோர் நேரப்படி இன்று வெள்ளி இரவு 9:00 மணிக்கு பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட Abhinandan Varthaman என்ற தமிழ்நாட்டு இராணுவ விமானி Wagah எல்லையை கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளார். அவரை பல்லாயிரம் இந்தியர் வரவேற்று உள்ளனர்.
.
இவரின் யுத்த விமானம் காஸ்மீரை ஊடறுக்கும் பாகிஸ்தான்-இந்திய எல்லையை (Line of Control) கடந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீருள் நுழைந்த போதே சுட்டு வீழ்த்தப்பட்டது.
.
இந்திய விமானியை விடுதலை செய்தது பாகிஸ்தான் காட்டும் அமைதிக்கான அடையாளம் (pease gesture) என்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
.
அதேவேளை ஜெர்மனிக்கான இந்திய தூதுவர் பாகிஸ்தானின் இச்செயல் அவர்களின் முதிர்ச்சிக்கு (maturity) அடையாளம் என்றுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் ஆயுத குழு மீதான இந்தையாவின் தாக்குதல் பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல என்றும் தூதுவர் கூறியுள்ளார்.
.