இணக்கம் எதுவும் இன்றி முடிந்தது ரம்ப்-கிம் சந்திப்பு

TrumpKim

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியடனாமின் ஹனோய் (Hanoi) நகரில் இடம்பெற்ற இரண்டாம் சந்திப்பும் இணக்கம் எதுவும் இன்றி முன்னராகவே முடிந்துள்ளது.
.
சிங்கப்பூரில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பின்போது இருந்த அளவு எதிர்பார்ப்புகள் வியடனாம் சந்திப்பில் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இரண்டாம் சந்திப்பில் இருந்த குறைந்த அளவு எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை.
.
வடகொரியா பொருளாதார தடையை முற்றாக நீக்கவேண்டும் என்று கேட்பதாகவும் அதை செய்ய முடியாது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பொருளாதார தடையை முற்றாக நீக்கினால் தாம் அணு ஆயுதங்களை கைவிட தயார் என்று கிம் கூறியதாகவும் ரம்ப்  கூறி உள்ளார்.
.
இன்னோர் ரம்ப்-கிம் சந்திப்புக்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை என்றும் ரம்ப் கூறியுள்ளார்.

.