இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 78 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 100 பேர் வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மரணித்தோருள் பெண்களும் அடங்குவர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இங்கு கள்ள கசிப்பால் பாதிகப்பட்டோர் அனைவரும் Golaghat மற்றும் Jorhat பகுதி தேயிலை தோட்ட ஊழியர்களே. இவர்களுக்கு அண்மையிலேயே ஊதியம் கிடைத்திருந்தது.
.
Jorhat Mediacl College என்ற வைத்தியசாலையில் மட்டும் 9 பெண்களும், 11 ஆண்களும் சிகிசைகள் பயனளிக்காததால் பலியாகி உள்ளனர்.
.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தில் கள்ள கசிப்புக்கு 100 பேர் பலியாகி இருந்தனர்.
.
2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தில் 172 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி இருந்தனர்.
.