பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று புதன் இரவு ஏற்பட்ட தீக்கு குறைந்தது 70 பேர் பலியாகி உள்ளனர். இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
அத்துடன் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கீழே இருந்த உணவு விடுதிகள், கடைகள் போன்றவற்றில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
.
பல மாடிகளை கொண்ட மக்கள் குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இரசாயன பொருட்களும் பெருமளவில் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு ஆரம்பித்த தீ பின்னர் அருகில் இருந்த மற்றைய கட்டிடங்களுக்கும் பரவி உள்ளது.
.
சுமார் 200 தீயணைப்பு படையினர் அந்த தீயை கட்டுப்பாட்டுள் கொண்டுவர முயன்றாலும், தீ வியாழன் காலைவரை தொடர்ந்துள்ளது.
.
2013 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஆடை தயாரிப்பு நிலையம் ஒன்று தீப்பற்றிக்கொண்டதால் சுமார் 1,100 பேர் வரை பலியாகி இருந்தனர்.
.