அமெரிக்காவுக்கு ரஷ்ய ஜனாதிபதி Putin இன்று புதன் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஐரோப்பிய தளங்களுக்கு நகர்த்துமாயின் ரஷ்யா மீண்டும் தனது ஏவுகணைகளை அமெரிக்க குறிகளை நோக்க வைக்கும் என்று கூறியுள்ளார் பூட்டின் (Putin).
.
ரம்ப் தலைமயிலான அமெரிக்கா INF என்ற அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அண்மையில் வெளியேறியதும், அமெரிக்க அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அண்மையில் நிலைகொள்ள முயல்வதும் தம்மை இந்நிலைக்கு தள்ளி உள்ளதாக பூட்டின் கூறியுள்ளார்.
.
ரஷ்யாவிடம் Poseidon என்ற ஆளில்லா நீர்மூழ்கி உள்ளதாகவும், அவை Zircon என்ற ஏவுகணையை ஏவ வல்லன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத்துடன் ஒப்பிடுகையில், 9 மடங்கு வேகத்தில், 620 மைல்கள் செல்ல வல்லன. அது உண்மை ஆயின், அமெரிக்காவின் தற்போதைய ஏவுகணை தடுப்பு முறைகள் அனைத்தும் பயனற்று போகும்.
.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட INF உடன்படிக்கையின்படி 500 முதல் 5,500 km தூரங்களுக்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சோதனை செய்வது, நிலைகொள்ள வைப்பது தடை செய்யப்பட்டு இருந்தது.
.