மலேசியாவில் சில தற்போதைய அமைச்சர்கள் பொய்யான பட்டதாரி சான்றிதழ்களை (fake degree) கொண்டுள்ளமை பகிரங்கத்துக்கு வந்துள்ளது. குறைந்தது 6 அமைச்சர்கள் இவ்வாறு இணையத்தில் பணத்துக்கு விற்கப்படும் போலி பட்டதாரி சான்றிதழ்களை பயன்படுத்தி உள்ளனர்.
.
உதவி வெளியுறவு அமைச்சர் Marzuki Yahya தன்னிடம் பிரபல Cambridge University வர்த்தக சான்றிதழ் உள்ளதாக ஆவணப்படுத்தி இருந்தார். ஆனால் அவரிடம் உள்ளது Cambridge International University என்ற பெயரில் இணையத்தில் காசுக்கு விற்கப்பட்ட பொய்யான சான்றிதழ் ஆகும்.
.
வீடமைப்பு (Housing) அமைச்சர் Kamaruddin தான் ஓர் National University of Singapore பட்டதாரி என்று கூறி வந்துள்ளார். அனால் அந்த பல்கலைக்கழகத்தில் இவரின் பெயர் இடம்பெறவில்லை.
.
Mahfuz Omar என்ற பாராளுமன்ற உறுப்பினரும் தன்னிடம் பட்டதாரி சான்றிதழ் உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அவரிடம் உள்ளதும் இணையத்தில் காசுக்கு பெறப்பட்ட பொய் சான்றிதழே.
.
மற்றைய நாடுகளைப்போலவே மலேசியாவிலும் அரசியலுக்கு வருவோர் பல்கலைக்கழக சான்றிதழ் பெற்று இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் இந்த அரசியவாதிகள் பொய் சான்றிதழ்களை கொண்டுள்ளார்கள்.
.