இந்தியாவின் கட்டுப்பாட்டுள் உள்ள காஸ்மீர் பகுதில் இடம்பெற்ற கார் குண்டுக்கு குறைந்தது 40 படையினர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 3:15 மணியவில் இடம்பெற்று உள்ளது.
.
சுமார் 78 பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், 2,500 படையினருடன் ஸ்ரீநகர் (Srinagar) பகுதியில் உள்ள பெரும்தெரு ஒன்றில் பயணிகையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. குண்டை கொண்ட தற்கொலைக்காரரின் வாகனம் படையினரின் பஸ் ஒன்றுடன் மோதி வெடித்துள்ளது.
.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், மாலை தீவு ஆகிய நாடுகள் உடனடியாக இந்த தாக்குதலுக்கு கவலை தெரிவித்து உள்ளன.
.
பாகிஸ்தானை தளமாக கொண்ட ஆயுத குழுக்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டுள் உள்ள காஷ்மீர் பகுதியில் தாக்குதல் செய்து வருகின்றன. Jaish-e-Mohammad குழு அவற்றுள் பெரியது.
.
இந்த காரில் இருந்த குண்டு 300 முதல் 350 kg வரையான எடை கொண்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
.