வியட்நாமில் இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு

TrumpKim

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) தமது இரண்டாம் சந்திப்பை வியட்நாமில் நிகழ்த்தவுள்ளனர். இந்த மாதம் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் (February 27, 28) இவர்கள் நேரடியாக சந்திக்கவுள்ளனர். சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு எதையும் சாதிக்காத நிலையில் இந்த இரண்டாம் சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் மிக குறைவே.
.
வடகொரியா பதிலுக்கு எதையும் எதிர்பாராது தனது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ரம்ப எதிர்பார்க்கிறார். ஆனால் தாம் படிப்படியா மட்டும் அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிடுவதாகவும், பதிலுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் உதவிகளை தமக்கு வழங்கவேண்டும் என்றும் கூறுகிறது. குறிப்பாக தென்கொரியாவில் நிலை கொண்டுள்ள பல்லாயிரம் அமெரிக்க இராணுவம் அங்கிருந்து அகற்றப்பட கேட்கப்படலாம். சீனாவின் விருப்பமும் அதுவே. அமெரிக்கா சீனாவுக்கு அருகில் உள்ள இந்த இராணுவ நிலைகளை கைவிட விரும்பாது.
.
வியட்நாம் வடகொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று. இரண்டு நாடுகளும் சுமார் 70 வருடங்களாக நட்புடன் செயல்பட்டு வந்துள்ளன. அமெரிக்காவுடன் வியடனாம் யுத்த செய்த காலத்தில் அப்போதைய வடக்கு வியட்நாமுக்கு வடகொரியாவின் விமான படையினர் உதவி வழங்கி இருந்தனர்.
.
வியட்நாம் தற்போதும் ஒரு கம்யூனிச நாடாக இருப்பினும், அமெரிக்காவுடன் நல்ல உறவை வளர்ந்துள்ளது. அங்கு வளரும் பொருளாதாரமும், சீனாவுக்கு பதிலாக செயல்படக்கூடிய நாடாகவும் இருப்பதுவும் அமெரிக்க-வியட்நாம் உறவு வளர காரணமாக இருக்கின்றன.
.