பாரிய பொருளாதார இடருள் இருக்கும் வெனிசுவேலா என்ற தென் அமெரிக்க நாட்டில் அமெரிக்கா ஒரு ஆட்சி கவிழ்ப்பை செய்கிறது என்று கூறப்படுகிறது. இதுவரை காலமும் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்டு வந்த வெனிசுவேலா, பெட்ரோலிய சந்தையின் வீழ்ச்சி காரணமாக, பாரிய பொருளாதாரா இடருள் உள்ளது.
.
இன்று வெனிசுவேலாவின் எதிர் கட்சி தலைவர் Juan Guaido தன்னை தானே வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தி உள்ளார். தேர்தல் எதுவும் இன்றி அமெரிக்க ஆதரவு எதிர் கட்சி செய்த அறிவிப்பை அமெரிக்கா உடனடியாக வரவேற்று உள்ளது. ஜனாதிபதி ரம்ப் Juan Guaido வுக்கான தனது ஆதரவை tweeter மூலம் தெரிவித்து உள்ளார்.
.
அமெரிக்காவுடன், ஆர்ஜென்டீனா, பிரேசில், கனடா, சிலே, கொலம்பியா, Costa Rica, Ecuador, Peru ஆகிய நாடுகளும் எதிர் கட்சியின் கவிழ்ப்பை ஆதரித்து உள்ளன. மெஸ்சிக்கோ உட்பட்ட சில நாடுகள் ஆளும் கட்சியையே தற்போதும் ஆதரிக்கின்றன.
.
ஆனால் வெனிசுவேலாவில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்து ஜனாதிபதியாக இருக்கும் Nicolas Maduro தானே தற்போதும் ஜனாதிபதி என்றுள்ளார். அத்துடன் எதிர் கட்சியின் ஆட்சி கவிழ்ப்புக்கு உதவும் அமெரிக்காவுடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து உள்ளார். வெனிசுவேலாவில் இருக்கும் அமெரிக்காவின் அதிகாரிகளை உடனடியாக வெளியேறும்படியும் கூறி உள்ளார் Maduro.
.
கடந்த சில நாட்களாக Maduro அரசுக்கு எதிராக வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று இருந்தன.
.