Google நிறுவனத்தின் Street View என்ற பிரிவே உலகப்படத்தையும், சில நாடுகளில் வீதிகளை படம்பிடித்தும் Google Map இல் வெளியிடுகிறது. இவ்வாறு வீதிகளை படம்பிடிக்க ஒவ்வொரு வீதியிலும் Camera பொருத்திய வாகனங்கள் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்கள் படம் பிடித்தலுடன் மட்டும் நின்றுவிடாது, வீதியின் இருபுறத்தேயும் உள்ள வீடுகளின் Router களில் உள்ள தனியார் விபரங்களையும் எடுத்து சென்றுவிட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டது என்கிறது Google. ஆனால் பல அமெரிக்க மாநில அரசுகள் அதை நம்புவதாக இல்லை. இப்போது Google இதற்கு U$7 மில்லியன் குற்றப்பணம் செலுத்தி தப்பிக்கொள்ள முனைகிறது.
இதே விடயத்துக்கு அமெரிக்க மத்திய அரசின் FCC (Federal Communications Commission) ஏற்கனவே $45,000 குற்றப்பணமாக பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க FCC இனது அறிக்கை ஒன்றின்படி, Google ஊழியர்கள் தம்மால் தனியாரின் password, Text Messages, emails என்பவற்றையும் களவாட முடியும் என்று தமது நண்பர்களுக்கு கூறியுள்ளனர்.
தரமான பாதுகாப்பு அற்ற தனியார் Router களே இவ்வாறு களவாடலுக்கு இறையாகியுள்ளன. தற்போதைய தரமான பாதுகாப்பு WPA2 என்ற encryption பயன்பாடே. இது முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்றாலும், சாதாரண வீடுகளுக்கு இது போதும். பழைய WPA அல்லது WEP என்பன இப்போது பாதுகாப்பானது அல்ல.