அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) பெப்ருவரி மாத இறுதி காலத்தில் மீண்டும் சந்திக்கவுள்ளனர் என்று கூறியுள்ளது வெள்ளைமாளிகை. இது இவர்களின் இரண்டாம் சந்திப்பாக இருக்கும். கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு இதுவரை எதையும் சாதித்து இருக்கவில்லை.
.
நேற்று வெள்ளிக்கிழமை கிம்மின் முக்கிய பிரமுகர் Kim Yong Chol அமெரிக்க ஜனாதிபதி ரம்பை வெள்ளைமாளிகையில் சந்தித்து 90 நிமிடங்கள் உரையாடிய பின்னரே இரண்டாம் ரம்ப் -கிம் சந்திப்பு தொடர்பான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
.
இரண்டாம் சந்திப்புக்கான இடம் இதுவரை வெளியிடப்படவில்லை. இரண்டாம் சந்திப்பு இடபெறக்கூடிய ஒரு நாடாக வியட்னாமும் கருதப்படுகிறது.
.
கிம் சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்று, சீன ஜனாதிபதியை சந்தித்து இருந்தார். அமெரிக்க-சீன பொருளாதார யுத்தத்தில் வடகொரிய விவகாரமும் பிணையப்பட்டு உள்ளது. வடகொரியாவை கட்டுப்படுத்தும் பலம் சீனாவிடமே உள்ளது.
.